November 8, 2008

நேரம் 4:53 PM வகை வரிகள் அறிவுமதி

திரைப்படம்: கண்ணே கலைமானே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.ஜானகி
ஆண்டு: 1982

'யாத்ரா' என்று மலையாளத்தில் இயக்குநர் பாலு மகேந்திரா எடுத்தபடம்
‘நிரீக்‌ஷனா' என்று தெலுங்கில் எடுக்கப்பட்டது அந்தப் படம்
‘கண்ணே கலைமானே' என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது அந்தப்
படத்தின் பாடல்களில் இதுவும் ஒன்று...

இந்த பாடலின் மெட்டு மூன்றாம் பிறையில் கமலஹாசன் ஸ்ரீதேவியைச் சந்திக்கும் காட்சியில்.. இசைஞானி பின்னனி இசையாக கொடுத்தது பின் ‘ஓளங்கள்' திரைப்படத்தில் ‘தும்பிவா' என்ற பாடலாக உருப்பெற்றது பின்
‘ஆட்டோராஜா' என்ற படத்தில் புலவர் புலமைபித்தன் எழுத ‘சங்கத்தில் பாடத கவிதை' என்று அழகானது அறிவுமதியால் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே என்று தமிழானது...






நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே

(நீர் வீழ்ச்சி)

தெம்மாங்கு மழை வந்து பெய்யுது
தேன் சிட்டு நனைகின்றது
கண் மீன்கள் கரைவந்து கொஞ்சுது
மீன் கொத்தி மிரள்கின்றது
தண்ணீரின் சங்கீத கொலுசுகள்
மலை வாழை கனவோடு அணிய
இளங்காலை ஒளித்தூறல் கசிந்திட
முடி நெளிகள் பொன்சூடி மகிழ
இமையாலே... இதழாலே...
விரலாலே.... இரவாலே...

அங்கள் சிருங்கார ஓடைகள்
அணைமீற விடை சொல்லும் ஆடைகள்

(நீர் வீழ்ச்சி)

பொன்னந்தி இருள் வாரி முடியுது
மோகப் பூ குவிகின்றது
கண்ணாங்கே இமை மீறி நுழையுது
காதல் பூ மலர்கின்றது
துரும்பொன்று இமை சேரும் பொழுதினில்
முள் என்று துடிக்கின்ற மனசு
மழை வில்லில் கயிறாடும் நினைவினில்
மனம் துள்ள உயிராகும் உறவு
பொன் ஊஞ்சல்... பூ ஊஞ்சல்...
அம்மம்மா இது காதல்
அணுவெங்கும் கார்காலம் வளரது
பலநூறு தீபங்கள் மலருது....

(நீர் வீழ்ச்சி)

0 மறுமொழிகள்: