November 6, 2008

நேரம் 8:56 PM வகை வரிகள் அறிவுமதி

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா
ஆண்டு : 1996





ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ ...

பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே ...

ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ...ஒ ...

பெண்: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ....ஒ ...

ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ ...

பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ (செம்பூவே )

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்

பெண்: தங்கத் திங்கள் நெற்றி பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாசச் சூட்டில் காதல் குற்றாலம்

ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா ..

பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி

ஆண்: ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி

பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீறியதோ ...

(செம்பூவே )

பெண்: இந்தத் தாமரைப்பூ தீயில் நின்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ

ஆண்: அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன்பூவே ...

பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ
பாவைமயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ ..

ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே

பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்வேன் நானே

ஆண் பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணைப் புதையல் ரகசியமே ...

(சாய்ந்தாடும் )

0 மறுமொழிகள்: