November 8, 2008

நேரம் 4:53 PM வகை வரிகள் அறிவுமதி 0 மறுமொழிகள்

திரைப்படம்: கண்ணே கலைமானே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.ஜானகி
ஆண்டு: 1982

'யாத்ரா' என்று மலையாளத்தில் இயக்குநர் பாலு மகேந்திரா எடுத்தபடம்
‘நிரீக்‌ஷனா' என்று தெலுங்கில் எடுக்கப்பட்டது அந்தப் படம்
‘கண்ணே கலைமானே' என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது அந்தப்
படத்தின் பாடல்களில் இதுவும் ஒன்று...

இந்த பாடலின் மெட்டு மூன்றாம் பிறையில் கமலஹாசன் ஸ்ரீதேவியைச் சந்திக்கும் காட்சியில்.. இசைஞானி பின்னனி இசையாக கொடுத்தது பின் ‘ஓளங்கள்' திரைப்படத்தில் ‘தும்பிவா' என்ற பாடலாக உருப்பெற்றது பின்
‘ஆட்டோராஜா' என்ற படத்தில் புலவர் புலமைபித்தன் எழுத ‘சங்கத்தில் பாடத கவிதை' என்று அழகானது அறிவுமதியால் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே என்று தமிழானது...






நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே

(நீர் வீழ்ச்சி)

தெம்மாங்கு மழை வந்து பெய்யுது
தேன் சிட்டு நனைகின்றது
கண் மீன்கள் கரைவந்து கொஞ்சுது
மீன் கொத்தி மிரள்கின்றது
தண்ணீரின் சங்கீத கொலுசுகள்
மலை வாழை கனவோடு அணிய
இளங்காலை ஒளித்தூறல் கசிந்திட
முடி நெளிகள் பொன்சூடி மகிழ
இமையாலே... இதழாலே...
விரலாலே.... இரவாலே...

அங்கள் சிருங்கார ஓடைகள்
அணைமீற விடை சொல்லும் ஆடைகள்

(நீர் வீழ்ச்சி)

பொன்னந்தி இருள் வாரி முடியுது
மோகப் பூ குவிகின்றது
கண்ணாங்கே இமை மீறி நுழையுது
காதல் பூ மலர்கின்றது
துரும்பொன்று இமை சேரும் பொழுதினில்
முள் என்று துடிக்கின்ற மனசு
மழை வில்லில் கயிறாடும் நினைவினில்
மனம் துள்ள உயிராகும் உறவு
பொன் ஊஞ்சல்... பூ ஊஞ்சல்...
அம்மம்மா இது காதல்
அணுவெங்கும் கார்காலம் வளரது
பலநூறு தீபங்கள் மலருது....

(நீர் வீழ்ச்சி)

நேரம் 4:40 PM வகை வரிகள் அறிவுமதி 0 மறுமொழிகள்

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ - குழுவினர்கள்
ஆண்டு : 1996



இது தாய் பிறந்த தேசம்
நம் தந்தை ஆண்ட தேசம்
இது நாம் வணங்கும் தேசம்
உயிர் நாடி இந்த தேசம்
மண் பெரிதா உயிர் பெரிதா
பதில் தரவா இப்போதே
வா புலியே நம் வாழ்வும் சாவும் யார் வசம்

(வந்தே மாதரம்...)


வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனை சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமி சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று
நிலத்தடியில் புதைந்திருக்கும்
பினங்களுக்கும் மனம் இருக்கும்

(வந்தே மாதரம்) ....

தாயோ பத்து மாசம் தான்
அதிகம் சுமந்தது தேசம் தான்
உயிருன் உடலும் யார் தந்தார்
உணர்ந்து பார்த்தால் தேசம் தான்
இந்த புழுதிதான் உடலாச்சு
இந்த காற்று தான் உயி மூச்சு
இன்று இரண்டுமே பரிப்போச்சு
இன்னும் என்னடா வெரும் பேச்சு
கை விலங்கை உடைத்திடடா
எரிமலையே எழுந்திடடா

(வந்தே மாதரம்) ....

நேரம் 4:18 PM வகை வரிகள் அறிவுமதி 0 மறுமொழிகள்

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : சித்ரா - கங்கைஅமரன்
ஆண்டு : 1996





மன்னன் கூரைச்சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கைக்கூடாதோ
சிறைக்கதவுகள் தான் தாழ் திறவாதோ
கண்ணன் வந்து நேரில்
என்னை சேரும் நாளில்
என்னுயிர்ல் மின்னல் தானோ
இனி பூ மழையும் கொஞ்சு தேனோ
இள மாப்பிளைக்கு புது பெண்ணும் நான் தானோ
நல் முத்தே வா வா ஓ......



செந்துர பொட்டிடேன் ஒலி பொன்வலை கையில் அணிந்தேன்
ரெண்டுக்கும் மெத்தைமேல் சிந்த ஆசை
சாமத்தில் பூசைக்கு உயிர் திரியில் விளக்கேற்றி
நான் வைப்பேன் என் மன்னன் பெயரைச் சொல்லி
பிள்ளை செல்வம் நூறென்று சொல்லி ஊரும் மெச்சும்தான்
நித்தம் பள்ளி பாடங்களும் கலைகள் பலவும் தருவேன் நான்
நாளும் பொழுதும் உள்ள்ம் இளைத்தேன் என்னை தேடி வா
முல்லைக் கொடியும் முள்ளை அள்ளி தூவும் முன்பே
நீ வள்ளல் போல் கண்ணா வா...

(மன்னன்)

குழு: தேன் எடுத்து வச்சிருக்கும் தேனீ நீ
மறு பெளர்ணமிக்குள் பால் குடிக்கும் பார் நீ
அடி குயிகள் பாடும் நாள் வந்தால் குளவைச் சத்தம் கேட்காதா
துடிக்கும் துயரம் தீர்க்கதான் அவன் காலடி சத்தம் கேட்காதா



பட்டாடை மேல் எல்லாம் என் மன்னவன் ஆசை உண்டு
நாள் தோறும் நான் வைப்பேன் பொன்விளக்கேற்றி
பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேர்கையில் தாவனி வீசி
இனி நாள் தோறும் தாலாட்டும் தாயும் நான் தான்
தீயில் தீரும் மோகங்கள் நீரில் தீரா தாபங்கள்
கப்பல் கற்பனை வேகம் போய் இன்றே அவருடன் வந்துடுமா
உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி ஒய்வும் கொள்ளட்டும்
முத்தம் பதித்தவன் நெஞ்சில் நானே
மெத்தையிடும் நாள் தான் தாங்கள் பூச்சுடும்..

(மன்னன்)

நேரம் 3:37 PM வகை வரிகள் அறிவுமதி 0 மறுமொழிகள்

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா மற்றும் குழுவினர்கள்
ஆண்டு : 1996




ஆண்: சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடல் அலை தாண்டி வந்து தீண்டும் உன் ஆவி
நிலவை பொட்டு வைத்து பவழப்பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்

குழு: சித்திர பூவே பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா

(சுட்டும்)

ஆண்: உனது பெயரை மந்திரம் என
ஓதுவேன் ஓதுவேன்

பெண்: மின்மினிகளில் நம் நிலவினை
தேடுவேன் தேடுவேன்
ஆண்: உனது பெயரை மந்திரம் என
ஓதுவேன் ஓதுவேன்

பெண்: மின்மினிகளில் நம் நிலவினை
தேடுவேன் தேடுவேன்

ஆண்: சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்

பெண்: மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்

ஆண்: என்றும் உனை நான் பாடுவேன் கீதாங்சலியாய்
உயிரே உயிரே பிரியமே சகி....

பெண்: சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா

ஆண்: தங்க நிலவுக்கு ஆரிராரோ பாடவந்தேன் கண்ணே

பெண்: இரு விழிகளில் உயிர் விழுந்தது ஊமையாய் ஊமையாய்

ஆண்: முள் மனதினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்

பெண்: வின்னுலகம் எரியுதே பெளர்னமி தாங்குமா

ஆண்: இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ

கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய்

(சுட்டும்)

நேரம் 2:47 PM வகை வரிகள் அறிவுமதி 0 மறுமொழிகள்

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா
ஆண்டு : 1996



பெண்: ஆலோலங்கிளி தோப்பிலே

தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி
விளையாடிடக் கூடாதடி கூட்டுக்காரி

ஆண்: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

பெண்: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் அய்யோ அய்யயோ!!!
ஆண்: செல்லக்கிளி சிந்து படிக்கும் அய்யோ அய்யயோ!!

(ஆலோலங்கிளி தோப்பிலே)

ஆண்: கடல்கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ
பெண்: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ
ஆண்: காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலா பெண்ணே
பெண்: தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன் ஊஞ்சல் ஆடி வா
ஆண்: வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

(ஆலோலங்கிளி)

பெண்: கனவுக் கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ
ஆண்: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்க போகலாமோ
பெண்: பூ விழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
ஆண்: நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ
பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய் தானோ
பெண்: ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா புதுக் காதல் குறுந்தொகையா

(ஆலோலங்கிளி)

November 6, 2008

நேரம் 8:56 PM வகை வரிகள் அறிவுமதி 0 மறுமொழிகள்

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா
ஆண்டு : 1996





ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ ...

பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே ...

ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ...ஒ ...

பெண்: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ....ஒ ...

ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ ...

பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ (செம்பூவே )

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்

பெண்: தங்கத் திங்கள் நெற்றி பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாசச் சூட்டில் காதல் குற்றாலம்

ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா ..

பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி

ஆண்: ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி

பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீறியதோ ...

(செம்பூவே )

பெண்: இந்தத் தாமரைப்பூ தீயில் நின்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ

ஆண்: அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன்பூவே ...

பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ
பாவைமயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ ..

ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே

பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்வேன் நானே

ஆண் பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணைப் புதையல் ரகசியமே ...

(சாய்ந்தாடும் )

November 5, 2008

நேரம் 8:35 PM வகை வரிகள் அறிவுமதி 0 மறுமொழிகள்

திரைப்படம் : இராமன் அப்துல்லா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா
ஆண்டு : 1997







ஆண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

(முத்த...)


பெண்: காதல் வழிச் சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை

ஆண்: நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை

பெண்: தாகம் வந்து பாய் விரிக்க
தாவணிப் பூ சிலிர்க்கிறதே

ஆண்: மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே

பெண்: உந்தன் பேரைச் சொல்லித்தான்
காமன் என்னைச் சந்தித்தான்

ஆண்: முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்

பெண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே


ஆண்: கனவு வந்துக் காத்திருக்கு
தூங்கிக் கொள்ள மடி இருக்கா

பெண்: ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்கா

ஆண்: பூவைக்கிள்ளும் பாவனையில்
சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்

பெண்: மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் தர தீண்டுகிறாய்

ஆண்: மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்

பெண்: தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

(முத்த...)

November 4, 2008

நேரம் 8:54 PM வகை வரிகள் அறிவுமதி 0 மறுமொழிகள்

திரைப்படம்: சொல்லாமலே
இசை:பாபி
பாடியவர்கள்: ஹரிஹரன் - சித்ரா
ஆண்டு: 1998




ஆண்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே
(சொல்லாதே)
ஆண்: மெளனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய்
பெண்: காதல் மொழி வாங்க வந்தாய் நீயும் சொல்ல மாட்டாய்
ஆண்: நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே
பெண்: மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே
ஆண்: உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் சுவாசித்தேன்
பெண்: காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இன்று ஏதோ எதோ ஊடல்

(சொல்லாதே)

பெண்: காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்
ஆண்: காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம்
பெண: நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு
ஆண்: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு
பெண: சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே
ஆண: என்னவோ இது என்னவோ இந்தக் காதல் ஈரத் தீயோ

(சொல்லாதே)